சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடைசி நேரத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்..

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடைசி நேரத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்

உலகெங்கிலும் வாழும் இந்திய மக்களால் தீபாவளித் திருநாள் வ்வொரு ஆண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்படும். தீபாவளி சிங்கப்பூர்,மலேசிய நாடுகளில் ஒருவாரம் கொண்டாட்டம் தான்.
சிங்கப்பூரில் தீபாவளி என்றாலே லிட்டில் இந்தியா ரு மாதத்திற்கு முன்பே களைகட்டத் தொடங்கிவிடும். இந்தாண்டு கரோனா தொற்றால் நேற்று வரை களையிழந்து இருந்த லிட்டில் இந்தியா இன்று களைகட்டியது.மக்கள் கூட்டம் அலைமோதியது..நாளை தீபாவளி என்பதால் சிங்கப்பூர் கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகிறது..
மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று வர முடியாமல் போனதால் பலரும் உள்ளூரிலேயே தீபாவளிக்கான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
தனால் உள்ளூர்க் கடைகளில் வியாபாரம் பெருகியது. லிட்டில் இந்தியாவிற்கு இன்று (நவம்பர் 13) படையெடுத்த கூட்டமே அதற்குச் சான்று.

ஆடை அலங்காரம், மத்தாப்பு, பலகாரம், உணவுப்பொருள்கள், நகை என்று அனைத்திற்குமே மக்கள் உள்ளூர்க் கடைகளை, குறிப்பாக லிட்டில் இந்தியா கடைகளை நாடினர்.

“இம்முறை நல்ல வியாபாரம். பலராலும் வெளிநாட்டிற்குச் செல்ல முடியாமல் போனதால் இங்கேயே பலகாரம் வாங்க வருகின்றனர்,” என்றார் ‘பாவாஸ் டெலிகசி’ நிறுவனத்தின் திரு முகம்­மது ஃபரூக், 50.

கடந்த பத்தாண்டுகளில் இதைவிடக் கூடுதலான வியாபாரத்தைக் கண்டதில்லை என்றார் ‘சக்கினா ஃபேஷன்’ கடையின் தையற்காரர் திரு ராமமூர்த்தி சாமிநாதன், 42.

கடைசி நேரத்தில் பொருள்கள் வாங்க தேக்காவிற்கு வந்த திரு லியோ ஃபிரான்சிஸ் குடும்பத்தினர், இணையத்தில் வாங்கு வதற்கும் நேரில் சென்று கடையில் வாங்கு வதற்கும் வேறுபாடு உள்ளது என்றனர்.

மருதாணியிட்டுக்கொண்டே தீபாவளி விற்பனைச் சந்தை இல்லாத வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார் குமாரி பரமேஸ்வரி இளமாறன், 27. “கடைசி நேரத்தில் தேக்காவிற்கு வந்து, பொருள்கள் வாங்கி, நள்ளிரவில் தீபாவளி வரவேற்புக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிறகே மருதாணியிட்டுக்கொள்வேன். இவ்வாண்டு அந்த அம்சம் இல்லாதது ஒரு குறைதான்,” என்றார் அவர்.