முக்கிய செய்திகள்

கௌதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் அனுஷ்கா!

கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் அனுஷ்கா இணையும் இரண்டாவது படம் இது.பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அனுஷ்கா நடிப்பது உண்மை என்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் வித்தியாசமான கதை இது எனவும் கூறுகின்றனர். அனுஷ்கா, பெண்ணுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தனியாளாக தூக்கி நிறுத்தக் கூடிய நடிப்புத் திறமை உள்ளவர். ‘பாக்மதி’ படத்தில் பிஸியாக நடித்துவரும் அனுஷ்கா அதற்குப் பிறகு கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anushka in Gowthams Project again