வங்கதேச தேர்தல்: முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி..

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் கள்ள ஓட்டு பெற்று, முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச தேசியவாத கட்சி போட்டியிட்ட 221 தொகுதிகளில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.