ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : நாளை அதிதீவிர புயலாக மாறும்: சென்னை வானிலை மையம்

ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை. ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. ஃபானி புயல் தற்போது

சென்னையிலிருந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சுமார் 1,050 கிலாமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அது அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரப் புயலாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிரப் புயலாகவும் மாறும்.

அப்போது அந்தப்புயல் வடக்கு மற்றும் வடமேற்கில் நகரும். ஏப்ரல் 30, மே 1 அன்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் 300 கி.மீ., தொலைவு வரை வந்து நிலைகொள்ளும்.

பின்னர் அது வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும். இதனால், தமிழக கடற்கரை பகுதிக்கு நேரடியான பாதிப்பு இல்லை.

புயல் நெருங்கும் வேளையில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.