முக்கிய செய்திகள்

சென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்

சென்னையில் ஜெனரேட்டர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட 40 அடி உயர இரும்பு மேடை சரிந்து விழுந்ததில் 18 பேர் காயமடைந்தனர்.

சென்னை தரமணி எம்.ஜி.ஆர் சாலை உள்ள தனியார் மருத்துமனைக்கு பின்புறத்தில்  ஜெனரேட்டர் அமைப்பதற்காக, இரும்பு ராடுகள் மூலம் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்பாரதமாக விதமாக இரும்பு ராடுகள் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 18 தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து பகுதிக்கு நேரில் வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..