முக்கிய செய்திகள்

காவிரிக்காக ஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவும் ஜெர்மனி மூனிச் பகுதியில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் மூனிச் பகுதியில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே ஒன்று கூடிய தமிழர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நியூட்னோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறுகளை இணைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் பதாகைகள் எந்திய ஜெர்மனிவாழ் தமிழர்கள் தமிழகத்தையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் போராட்டம் நடந்துவரும் நிலையில் ஜெர்மனிவாழ் தமிழர்கள் கூறுகையில் தமிழகத்தில் இருந்து எங்கலாம் போராட முடியவில்லை என்றாலும் கடல்கடந்து தமிழ் உணர்வுக்காக போராட்டம் நடத்தி எங்களது ஆதரவை தெரிவிக்கின்றோம் என்று கூறியுள்ளனர்.