சாதி மத விளையாட்டுகளை நிறுத்துவோம் : நடிகர் கமல்ஹாசன்..

மதுரை ஒத்தக்கடையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தி கமல் உரையாற்றி வருகிறார்.
இடது, வலது என்பதை விட மக்கள் நலன்தான் முக்கியம்”.நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்; என்னிடம் பணம் இல்லை; இருந்தாலும் கொடுக்க மாட்டேன்.டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எங்களின் வேகத்தை கூட்டியுள்ளார், இன்றே என் பிரசாரத்தை துவக்க வைத்துவிட்டார் –
பொறுத்தது போதும், இனி செயலை தொடங்குங்கள் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
அவர், ’இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள். இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை. நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன. அதனை மறக்க மாட்டோம். இங்கு எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று’ என்றார்.
கொடி குறித்து கமல் விளக்கம் :-

1.கொடியை உற்றுப்பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும்

2.ஆறு கைகள் – ஆறு மாநிலங்களை குறிப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது

3.ஆறு முனை நட்சத்திரம் மக்களை குறிப்பதாக உள்ளது
மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது என பேசினார்.