முக்கிய செய்திகள்

மத்திய அந்தமான் கடல்பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு..

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.