பாஜகவுக்கு முற்றும் நெருக்கடி: உ.பி சர்வீஸ் கமிஷன் தலைவரும் திடீர் ராஜினாமா

உத்தரப் பிரதேச துணை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சந்திரபூஷன் பாலிவால் தமது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்திர பூஷன் பாலிவாலுக்கும், ஆதித்யாநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது முற்றிவிட்ட நிலையிலேயே சந்திர பூஷன் பாலிவால் தற்போது பதவி விலகி இருப்பதாககவும் தெரிகிறது. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று (10. 12.18) பதவி விலகியது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. தொடர்ந்து பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா இன்று காலை பதவியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தார். இந்நிலையில், உ.பி. யிலும் அரசின் உயர்மட்ட பதவியில் இருந்து ஒருவர் விலகி உள்ளார். அரசு அமைப்புகளில் இருந்து உயரதிகாரிகள் பதவி விலகும் போக்கு, மத்தியிலும், கணிசமான மாநிலங்களிலும் ஆட்சி நடத்தி வரும் பாஜகவும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.