முக்கிய செய்திகள்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 பணியிடங்கள்..

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடங்கள்: 178

District Coordinator- 06 காலியிடங்கள்

மாத சம்பளம்: ரூ30,000
தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Block Coordinator (Technical): காலியிடங்கள் 83

மாத சம்பளம்: ரூ 20,000

தகுதி: ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

Block Project Assistants: காலிப்பணியிடங்கள் 83

மாத சம்பளம்: ரூ15,000

தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று, ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கணினியை கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும், வட்டார அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார பகுதியைச் சேர்ந்தவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.inஎன்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24/10/2018

அஞ்சல் முகவரி: இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை – 600 113.