முக்கிய செய்திகள்

புதுச்சேரியிலிருந்து தாய்லாந்துக்கு விமான சேவை தொடங்கியது..

புதுச்சேரியிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவை வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், புதுச்சேரியிலிருந்து தாய்லாந்திற்கு, ஹைதராபாத் வழியே செல்லும் வகையில், இன்று முதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, காலை 11.45 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் விமான மதியம் 1.20 மணிக்கு ஹைதராபாத்தைச் சென்றடையும். அங்கிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.40 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.