முக்கிய செய்திகள்

முடிவுக்கு வருகிறது போராட்டம்? :இந்த வாரம் படம் வெளியாகுமா?..


தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாமல் போராட்டம் அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. வேலைநிறுத்ததால் ஷூட்டிங் எதுவும் நடக்காத நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடக்கவுள்ள சங்க கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் எனவும், அதில் விஷால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து தான் இந்த வேலைநிறுத்தம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்கள் வெளியாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.