சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எருமபாளையத்தை சேர்ந்த அம்பிகாவின் மனுவில்

தனது கணவர் வீட்டாருக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த சொத்து வழக்கை வாபஸ் பெறும்படி காவல்துறையினர் தனது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

தனது சொத்து தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். விசாரணையின் போது சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக் கூடாது என உயர்நீதிமன்றம் பல உத்தரவுகள் வழங்கியும்

காவல்துறையினர் தலையிடுவதாக மனுதாரர் வழக்கறிஞர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.

இதையடுத்து உரிமையியல் விவகாரங்களில் காவல்துறை தலையிட கூடாது என்ற நீதிபதி, மனுதாரர் தொடர்பான சிவில் வழக்குகளில் சேலம் காவல்துறை தலையிடத் தடை விதித்து வழக்கை முடித்து வைத்தார்.