நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..

கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தற்போது பள்ளிகள்திறக்க வாய்ப்பில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு தேர்வு நடத்த வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.