ஜனநாயகம் பற்றி பேச காங்.. அருகதையில்லை : நாடாளுமன்றத்தில் மோடி ஆவேச பேச்சு..


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘இந்திய நாட்டைத் துண்டாக்கிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டியது. காங்கிரஸ் நேர்மையாக ஆட்சி நடத்தியிருந்தால், நாட்டின் நிலையே வேறு’ எனக் கடுமையாக விமர்சித்தார்.

`ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றி காங்கிரஸ் கட்சியினர் எங்களுக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகம் என்பது பா.ஜ.க-வுக்கு ரத்தத்தில் ஊறியது. சர்தார் வல்லபாய் படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் முழு காஷ்மீரும் நம்முடையதாக இருந்திருக்கும்’ என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, ’90 முறைக்கு மேல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி மாநில அரசாங்கங்களை அகற்றிய காங்கிரஸ், ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையானது. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது தேர்தலா? இல்லை முடிசூட்டு விழாவா?’ என கடுமையாக விமர்சித்தார்.

சாமானிய மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் காயப்படுத்துகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார் என்ற பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.