முக்கிய செய்திகள்

மருத்துவத் துறைக்கான ராகுலின் மூன்று முக்கிய வாக்குறுதிகள்: ட்விட்டரில் ப.சிதம்பரம் தகவல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மருத்துவத் துறையில் மூன்று முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அவையாவன:

1. மருத்துவத் துறையை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 3 சதவீதம் செலவிடப்படும்

2. ஒவ்வொரு குடிமகனுக்குமான மருத்துவ  சேவையை உறுதிப் படுத்துவதற்கான சுகாதார உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.

3. மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உருவாக்கப்படும். இதற்காக மருத்துவப் படிப்புகளுக்கான உதவித் தொகையை அதிகரித்து, கடன்களும் வழங்கப்படும்.