முக்கிய செய்திகள்

தொடர் மழை : திருவாரூர்,தஞ்சை, நாகை, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது.

இந்நிலையில் திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்.

நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.