முக்கிய செய்திகள்

புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி வருகை..


ஒகி புயலால் குமரி மாவட்டம் சீர்குலைந்து போனது.பல மீனவர்கள் இறந்து போன நிலையில் பல நுாறு மீனவர்களை காணவில்லை.புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி வருகை தரவுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளந்தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னதுறைக்கு நாளை (14 டிசம்பர் 2017) காலை 11.30 மணி அளவில் பார்வையிட வருகை தருகிறார் என தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.