முக்கிய செய்திகள்

தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..

 

தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கின.

இந்தியர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் திபாவளியை முன்னிட்டு வீதிகளில் அலங்காரங்கள்,தோரணங்கள் எனக் களைகட்டியுள்ளன. கடைகள்,மால்களில் தீபாவளி விற்பனைகளை கட்டி வருகிறது.

சிங்கப்பூர் அரசு தீவு முழுவதும் திபாவளி திருநாளைக் கொண்டாடும் வகையில் ரயில்களிலில் வண்ண விளக்குகள் மிளர்கின்றன.

ரயில் நிலையங்களில் வண்ணக் கோலங்கள் அழகாகக் காட்சி தருகின்றன.
தீபாவளியை அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் விழாவாக சிங்கப்பூர் அரசு கொண்டாடி வருகிறது.