தீபாவளி பண்டிகை: சென்னையிலிருந்து நெல்லை, கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ’ரயில் பார்ட்னர்’ என்றசெயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது தெற்குரயில்வே பொது மேலாளர் ஆர். கே. குல்சிரேஷ்டா பேசியதாவது:

நெல்லை, தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே 42சிறப்பு ரயில்கள்அறிவிக்கபட்டுள்ளன. இந்த ரயில்கள் சென்னையிலிருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோயில், கோவைக்கு விடப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவற்றில் சென்னை- நெல்லைக்கு 4 சிறப்பு ரயில்களும், சென்னை – கோவைக்கு4 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை 42.2 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகம்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ரயில் பார்ட்னர்’ செயலி மூலம் ரயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரயில் பயணத்தின் போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலி மூலம் 20 முக்கிய தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்படும்’’. இவ்வாறு அவர்தெரிவித்தார்.