முக்கிய செய்திகள்

டெல்லியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : 17 பேர் உயிரிழப்பு..


டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவென பரவிய தீ கிடங்கு முழுவதும் பரவியது.

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. அவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தீயணைப்பு படையினர் கூறுகையில், பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்பதால் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.