முக்கிய செய்திகள்

புத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…

அன்றாட வேலைப்பணிகளால் மனதளவிலும்,உடலளவிலும் பலர் சோர்வுடன் காணப்படுகின்றனர். இத்தகைய சோர்வைப் போக்கி புத்துணர்வு பெற துளசி டீ தயாரித்து அருந்தி வந்தால் உடலும்,மனமும் புத்துணர்வு பெறும்

செய்முறை :

துளசி இலை மற்றும் இஞ்சியை நன்கு மைய இடித்துக் கொள்ளவும்.

டீ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த துளசி , இஞ்சி பேஸ்டை போட்டுக் கொதிக்க விடவும்.

பின் டீ தூளை சேர்க்கவும். அதன் ஃபிளேவர் நன்கு கொதித்து வரும்வரைக் காத்திருக்கவும்.

அடுத்ததாக பால் மற்றும் சர்க்கரைச் சேர்த்துக் கலக்கவும்.

பால் நன்கு கொதித்து கலவையில் நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டினால் கமகம துளசி டீ ரெடி..!