முக்கிய செய்திகள்

டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..

இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது:

பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொழில்புரட்சியை நோக்கி முன்னெடுத்து செல்லும். இந்த சூழ்நிலையில், சான்பிரான்சிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு பிறகு, டில்லியில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.

புது இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியா திட்டம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மாற்றியது.

இந்தியாவின் வெற்றிபாதை,உலகில் தனித்துவமிக்கதாக உள்ளது. 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.