முக்கிய செய்திகள்

பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் : திமுக அதிரடி..


மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார் கட்சியில் இருந்து அன்பழகன் நீக்கம் செய்யப்பட்டார். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சுப.த.திவாகரனுக்கு பதில் கே.முத்துராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டார்.

மதுரை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு திமுக மாவட்ட அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டார். மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக வ.வேலுசாமி உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.