முக்கிய செய்திகள்

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழப்பு

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு விபத்து நிகழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்த போது ராஷிதியா என்ற இடத்தில் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது.

அதில், ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்பட 8 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.