பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று வழக்கத்தில் இருந்தது. பொதுத் தேர்வு ரத்து காரணமாக பெரும்பாலான மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ள நிலையில், சிக்கலை தவிர்க்க உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, பொறியியல் தரவரிசை பட்டியலில் ஒரே மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்று இருந்தால் எவ்வாறு மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கணிதம், இயற்பியல், விருப்பப்பாடம், ரேண்டம் எண், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண், பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வேதியியல் பாட மதிப்பெண் குறிப்பிடப்படவில்லை.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பதிவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.