ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
66,575-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். பதிவான 1,74,192 வாக்குகளில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுள்ளார்

வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளதுஅதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார்.
மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.