முக்கிய செய்திகள்

பிப் 21ல் கமல் அரசியல் பயண விபரம்..


நடிகர் கமல் தன் முழு அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ம் தேதி தொடங்க உள்ளார். அவரின் அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வீட்டிலிருந்து தொடங்க உள்ளார். அன்றைய தினம் கமல் மேற்கொள்ள உள்ள பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

காலை 7.45 மணிக்கு : அப்துல் கலாம் அவர்களின் வீட்டிற்கு செல்கிறார்.

காலை 8.15 மணிக்கு : அப்துல் கலாம் அவர்களின் பள்ளிக்கு செல்கிறார்

காலை 8.50 மணிக்கு : இராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்களுடன் சந்திப்பு.காலை 11.10 மணிக்கு : அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு செல்கிறார்.

காலை 11.20 மணிக்கு : மதுரைக்கு கிளம்புகின்றார்.

மதியம் 12.30 மணிக்கு : வழியில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுமக்களை சந்திக்கின்றார்.

மதியம் 2.30 மணிக்கு : பரமக்குடியில் பொதுமக்களை சந்திக்கின்றார். (லினா மஹால் முன்பு)

மதியம் 3.00 மணிக்கு : மானா மதுரையில் பொதுமக்களை சந்திக்கின்றார். (ஸ்ரீபிரியா தியேட்டர் அருகில்)

மாலை 5 மணிக்கு : மதுரை ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.

மாலை 6 மணிக்கு : கட்சி கொடி அறிமுகப்படுத்துதல்.

மாலை 6.30 மணிக்கு : பொதுக்கூட்டத்தில் உரை

இரவு 8.10 – 9.00 மணிக்கு :நம்மவர்ஸ் பேச்சு.