முக்கிய செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ ஜமீன் கே.கே.பி.முத்தையா காலமானார்..


சட்டப்பேரவை முன்னாள் உறுப்பின ரான கேகேபி. முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

கரூர் மாவட்டம் கடவூர் சமஸ்தானத்தின் 40-வது ஜமீன்தாரான இவர், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, கடவூர் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்எல்ஏவானார். 1977-ல் மருங்காபுரியில் போட்டியிட்டு 5-வது முறையாக எம்எல்ஏவானார்.

காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய 5 முதல்வர்களுடன் நெருக்கமாக இருந்தவர். உடல் நலக்குறைவு காரணமாக கடவூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.