கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபட்டால் மாற்றம் ஏற்படும்: ஆளுநர் பன்வாரிலால் அறிவுரை

படுக்கை அறையில் கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபட்டால் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் என ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள  ரெயில்வே திருமண மண்டபத்தில்  கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது, இந்த விழாவில் தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர்  பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் மாலை வணக்கம் எனக் கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

சிகாகோவில் விவேகானந்தர் பேசும் போது அன்பிற்கினிய சகோதரி சகோதரர்களே என கூறினார். அப்போது அனைவரும் கரகோசங்களை எழுப்பினர். அது தான் நமது நாட்டு பண்பாடு சகோதரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடு இது.

தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை அதிமுகள்ளது. ஸ்ரீ கிருஷ்னரின் அருளால் நாம் நலமுடன் உள்ளோம். ஆழ்மனதிலிருந்து வருவது தான் பக்தி. தமிழகம் அமைதியாக இருக்க பக்தி தான் காரணம், படுக்கையறையில் சிறிய அல்லது பெரிய அளவில்  கிருஷ்ணரின் புகைப்படத்தினை வைத்து வழிப்பட்டால் ஒரு வருடத்தில் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் பேசினா். இவ்விழாவில் சுமார் 500பேர் கலந்து கொண்டனர்.

Governor Banwarilal purohit Speech