முக்கிய செய்திகள்

கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் : உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் கமல்..

கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அப்போது ‘நான் உங்களுடன் கிராம சபையில் பங்கேற்க வந்துள்ளேன். நான் பங்கேற்கும் முதல் கிராமசபை உத்திரமேரூர் கிராம சபை.

இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த ஊர் பிரச்சனையை தெரிந்துக்கொள்ள வந்திருக்கிறேன். கிராம சபை காத்துக்கொண்டு இருக்கிறது’

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு பரப்பி வருகிறார். இன்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைகள் கூட்டப்பட வேண்டும்.

உத்திரமேரூரில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று இருக்கும் கமல்ஹாசன் அதற்கு முன் திறந்த ஜீப்பில் இருந்து மக்களிடம் பேசினார்.