கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மாணவன் பிரானேஷ் : அமைச்சர் உதயநிதி பாராட்டு : காரைக்குடியில் உற்சாக வரவேற்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார். அவரை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் .

 

சிறிய நகரான காரைக்குடியில் பிறந்து, 15 வயதே நிரம்பிய பிரானேஷ் தனது சிறுவயதிலேயே காமன்வெல்த் உள்ளிட்ட ஆசிய செஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றவர் அதன் மூலம் பன்னாட்டின் பார்வைக்கு ஆளாகி இருப்பவர் இன்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.

 

மென்மேலும் பிரானேஷ் அவர்களுக்கு பதக்கங்கள் குவியட்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பாராட்டினார்.

 

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மாணவன் பிரானேஷ் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

எளிய குடும்பத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவன் பிரானேஷ் இன்று காலை காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அவருக்கு காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பளித்தனர்.

 

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவன் பிரானேஷ் வரவேற்பில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பள்ளி தாளாளர் ஆர். சுவாமிநாதன்,பொருளாளர் முகமது மீரா , பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன்,குமார், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் மேலும்,மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்தி உற்சாக வரவேற்பளித்தனர்.

 

செய்தி & படங்கள்
சிங்தேவ்