முக்கிய செய்திகள்

குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் பதவியேற்பு ..


தற்போது நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் விஜய்ரூபானி குஜராத் முதல்வராக பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.விஜய் ரூபானியுடன் 18 அமைச்சர்களும் பதவி யேற்று வருகின்றனர்

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி,பாஜக தலைவர் அமித்ஷா மூத்த தலைவர் அத்வானி உட்பட பல பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.