முக்கிய செய்திகள்

குஜராத்,இமாச்சல் மக்களுக்கு நன்றி : ராகுல் ..


குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இரு மாநிலங்களிலும் அமையவுள்ள அரசுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநில மக்கள் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் கோபத்தோடு தேர்தலை சந்தித்த வேளையில் கண்ணியத்துடன் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் தொண்டர்களையும் அவர் பாராட்டியுள்ளார்.