முக்கிய செய்திகள்

இந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பொதுச் செயலாளராக இருந்து வந்த சுதாகர் ரெட்டியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தலித் சமுதாயத்தில் இருந்து இந்தப்பதவிக்கு வந்துள்ள முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 70 வயதான டி.ராஜா, 1994 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார்.

இரண்டு முறை நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானதை தொடர்ந்து,

டி.ராஜாவின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒலக்காசி கிராமத்தில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.