முக்கிய செய்திகள்

இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு பாஜக அரசுக்கு தகுதி குறைவு : ப.சிதம்பரம்..

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக பேசினார்.

அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தவறுகளுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பேற்க முடியும்? காங்கிரஸ், அரசு நிர்ணயித்ததை விட 9 சதவீதம் விலை குறைவு என்றால் கூடுதல் விமானங்கள் வாங்காதது ஏன் ? விலை குறைவு என்றால் 126 விமானங்கள் வாங்குவதற்கு பதிலாக ஏன் 36 விமானங்கள் மட்டும் வாங்க வேண்டும்? ரபேல் ஒப்பந்த கோப்புகளை பார்த்தால் தான் விவரங்கள் தெரியும்.

இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு பாஜகஅரசுக்கு தகுதி குறைவு. மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் போராடுகின்றன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ராணுவ விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக விதிகள் ஏதும் இல்லை. பழைய ஓட்டுச்சீட்டு முறையையே பயன்படுத்த காங்., வலியுறுத்துகிறது.

ஆனால் தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை. காங்., அரசை குற்றம்சாட்டு அதிமுக தலைவர்கள் இலங்கை போரின் போது எங்கு போனார்கள்? என கேட்டுள்ளார்.