பீகா­ரில் 700 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’…

பீகா­ரில் ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரும் ‘மாப்­பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. கடந்த 700 ஆண்­டு­க­ளாக இந்­தச் சந்தை நடந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.
பீகா­ரில் உள்ள மது­பானி மாவட்­டத்­தில் இந்த மாப்­பிள்­ளைச் சந்தை என்ற வினோத நிகழ்வு நடை­பெ­று­கிறது. அரச மரத்­த­டி­யில் ஒன்­பது நாள்­கள் நடக்­கும் இந்­தச் சந்­தை­யில் பங்­கேற்­ப­வர்­கள் இந்­நி­கழ்வை ‘சவு­ரத் சபா’ என்­றும் அழைக்­கி­றார்­கள். குறிப்­பிட்ட சமூ­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இதில் பங்­கேற்­கின்­ற­னர். திரு­ம­ணத்­துக்­குத் தயா­ராக உள்ள மண­ம­கன்­கள் ஒரு மேடை­யில் அமர வைக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

மாப்­பிள்­ளை­க­ளின் கல்­வித்­தகுதி, குடும்­பப் பின்­னணி ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் விலை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

இளம் பெண்­க­ளுக்கு வரன் தேடும் பெற்­றோர், சகோ­த­ரர்­கள், உற­வி­னர்­கள் அப்­பெண்­க­ளுக்கு ஏற்ற மண­ம­க­னைத் தேர்வு செய்­கி­றார்­கள். இந்த நவீன சுயம்­வ­ரத்­தில் பங்­கேற்­கும் ஆண்­கள் வேட்டி, ஜீன்ஸ், சட்டை அணிந்து வர­லாம். மற்ற உடை­களுக்கு அனு­மதி இல்லை.

மண­ம­க­னைத் தேர்ந்­தெ­டுத்த பின்­னர், இரு­த­ரப்பு விவ­ரங்­களும் கல்­வித்­த­கு­திக்­கான ஆவ­ணங்க ளும் சரி­பார்க்­கப்­ப­டு­கின்­றன. மண­ம ­க­னைப் பிடித்­தி­ருந்­தால் அவருக்காக நிர்­ண­யிக்­கப்­பட்ட சிறு தொகையை நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ள­ருக்கு அளிக்க வேண்­டும். வர­தட்­ச­ணைக் கொடு­மையை ஒழிக்­கும் நோக்­கத்­து­டன் இந்­தச் சந்தை ஆண்­டாண்டு கால­மாக நடத்­தப்­ப­டு­வ­தாக மூத்த குடி­மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.