முக்கிய செய்திகள்

ஐபிஎல்: சன்ரைஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் – 63 பந்தில் 128* குவிப்பு..


ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லியின் ரிஷப் பண்ட் 63 பந்தில் 128 ரன்கள் அடிக்க திணறிக்கொண்டிருந்த டெல்லியின் ஸ்கோர் 187க்கு சென்றது.

36 பந்தில் அரைசதம் :
டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 9, ஜசன் ராய் 11, ஸ்ரேயஸ் ஐயர் 3 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர்.பின்னர் வந்த ரிஷப் பண்ட் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். இவர் 36 பந்தில் அரைசதம் (55*) கடந்தார்.அடுத்த 27 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். இவர் 56 பந்துகளில் சதத்தை கடந்தார்.