முக்கிய செய்திகள்

ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர்.

1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம் நடுநிலைத்தன்மையை அறிவித்ததை அடுத்து அங்கு புரட்சி ஏற்பட்டு அரசாட்சி முடிவுற்றது.

அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சி இழந்து, அயதொல்லா கொமேய்னி அரசுக்கு தலைமை ஏற்றார்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் 40-ஆம் ஆண்டு நினைவாக லட்சக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு ஊர்வலம் மேற்கொண்டனர்.