ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்..

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில்,

அன்றைய காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் இரு தேசிய தலைவர்கள் சத்ய பால் மற்றும் சைபுதின் கிட்ச்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாலியன் வாலாபாக் 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பூங்காவாக இருந்தது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்ட இதற்கு 5 குறுகிய நுழைவாயில்கள் மட்டுமே இருந்தது.

அன்றைய தினம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரி டயர் கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தார்.

தடையை மீறி ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற டயர் வாயில் கதவுகளை அனைத்தையும் மூடி விட்டு மக்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் ஈவு இரக்கமில்லாமல் மக்களை சுட்டுத் தள்ளினர். இச்சம்பவத்தில், அப்பாவி பொதுமக்கள் 376 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,100 பேர் காயம் அடைந்தனர்.

சுதந்திரபோராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இச்சம்பவம் அமைந்தது. இச்சம்பவத்தின் நூற்றாண்டு விழா, ஏப்., 13ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இச்சம்பவத்திற்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

இந்திலையில், 1919 ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 100 ஆண்டுகள் கழித்து லண்டனின் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய பிரதம் தெரசா மே மன்னிப்பு கோரி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய ஆறாத சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.