ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி, 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றார்.

இதன்படி, முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது.

டிசம்பர் 7ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 12ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 16 மற்றும் 20ம் தேதிகளில் 4 மற்றும் 5ம் கட்ட தேர்தல்களும் நடைபெறுகின்றன.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன