முக்கிய செய்திகள்

ஓயாத உரையாடல்: க.சிவஞானம்

என்னைப் பார்த்த உடன் 
உனக்குள் பொங்கிய உற்சாகம்
என் கண்களுக்குள் புகுந்து
தொண்டையை அடைத்தது.

சிரமப்பட்டு உரையாடலைத் 
தொடங்கினேன்.
பேச ஆரம்பித்தோம்.

வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது
என்ற பதற்றம் எனக்குள்
பற்றி எரிந்தது.

முற்றுப் பெறாமல் 
உரையாடலைத் தொடர விரும்பினேன்.
நீயும் அப்படியே தொடர்ந்தாய்.

கடைசியாய் நான் கிளம்புகிறேன் என்று சொன்ன போது
உனது கண்களுக்குள் தெரிந்த ஏமாற்றம்
எனக்குப் பிடித்திருந்தது…

வீட்டுக்கு வந்ததற்குப் பிறகும்
உன்னோடு எனது உரையாடல் தொடர்ந்தது…

நீ இல்லாவிட்டாலும்
உன்னோடு நான் பேசிக் கொண்டிருந்தேன்.

நாளை 
அல்லது
நாளை மறுநாள்
மறுபடியும் உன்னைச் சந்திக்க வருவேன்
ஒரு புதிய உரையாடலுடன்….