சிக்கிம் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..

சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக் அருகே பாக்யாங் பயணிகள் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் 4,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 100-வது விமான நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.