முக்கிய செய்திகள்

கலைஞர் மீது கொண்ட பாசத்தால், கோபாலபுரத்தில் காத்துக் கிடந்த 85வயது பாட்டி..


கருணாநிதியின் நிலையை அறிந்து அவரைப் பார்க்க, அவரது சொந்த ஊரில் இருந்து வந்த 85வயது மூதாட்டி, அவரைப் பார்க்க முடியாமலே சென்றுள்ளார்.

தி.மு.க. தலைவா் கருணாநிதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை தரப்பில் நேற்று மாலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “கருணாநிதிக்கு வயது முதிர்வு காரணமாக சிறுநீரக குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு சிறிது காய்ச்சல் உள்ளது. அவரை 24 மணி நேரமும் மருத்துவா், செவிலியா் குழு தீவிரமாக கவனித்து வருகிறது.

தற்போது வீட்டிலேயே அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.