முக்கிய செய்திகள்

கோபாலபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் கலைஞரின் உடல்: மெரீனாவில் இடம் கோரி வலுக்கும் தொண்டர்களின் முழக்கம்

திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. திமுக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியபடியே உடன் செல்கின்றனர். கலைஞருக்கு மெரீனாவில் இடம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பியபடியே செல்கின்றனர். ஆவேசமடைந்த சிலர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

கலைஞரின் உடல் இரவு 1 மணிவரை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிஐடி காலனி இல்லத்திற்கும் எடுத்துச் செல்லப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கலைஞருக்கு மெரீனாவில் இடம் வேண்டும்  என்ற திமுக தொண்டர்களின் கோரிக்கையும், முழக்கமும் வலுத்து வருகிறது.

 

kalaingar’s Body brings to Gopalapuram