கல்லல் மாசிமகத் தேர்திருவிழா : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் கல்லலில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் ,சௌந்தர நாயகி அம்மன் கோயில்அமைந்துள்ளது.

இக் கோயிலில் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இருபத்தி இரண்டரை கிராமங்களை உள்ளடக்கி குன்னங்கோட்டை நாடு என்றழைக்கப்படும் இப்பகுதியில் இந்த தேர்திருவிழா முக்கிய நிகழ்வாகும்.

1920 ஆம் ஆண்டு வேப்பங்குளம் ஸ்ரீ மதுரகவி ஆண்டர் சுவாமிகள் மேற்பார்வையில் இத்தேர் வடிவமைக்கப்பட்டது.

சிற்பங்கள் நிறைந்த இத்தேர் தமிழகத்தில் உள்ள தேர்களில் மிகப் பெரிய தேர்களில் ஒன்றாகும்..

இதன் அழகு குன்றாமல் இன்றும் புதுப் பொலிவுடன் திகழ்கிறது.

இன்று மாலை 4.மணிக்கு தொடங்கிய தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.