முக்கிய செய்திகள்

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு குழு அமைத்து பழங்காநத்தத்தில் வரும் 25ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தினால் காவல்துறைக்கும் வருவாய் துறைக்கும் வேறு பணிகள் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.