முக்கிய செய்திகள்

கமல் இன்று தலைப்பு செய்தியாகலாம்; தலைவராக முடியாது : தமிழிசை கிண்டல்..


தலைப்பு செய்தியாக வேண்டுமானால் கமல் வரலாமே தவிர, நடிகர்கள் வந்து தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

நடிகர் கமல் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அப்துல்கலாமின் வீட்டிற்குச் சென்று, அவரது மூத்த சகோதரரிடம் ஆசி பெற்றார். அப்துல்கலாம் படித்த பள்ளிக்கூடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என்று இந்து முன்னனியினர் புகார் அளித்ததால், கமல் வருகைக்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. இதன் காரணமாக வெளியில் இருந்தே அப்துல்கலாமின் பள்ளியை கமல் பார்த்துச் சென்றார்.

இதனிடையே கமலின் அரசியல் பிரவேசம் பற்றி பாஜக மாநில தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தலைப்பு செய்தியாக வேண்டுமானால் கமல் வரலாமே தவிர, நடிகர்கள் வந்து தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.