காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளை சார்பாக மருத்துவர்கள் குடும்ப விழா காரைக்குடி அமராவதி மஹாலில் நடை பெற்றது . இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


அவர் பேசுகையில், மருத்துவர்கள் தங்கள் பணியின் அனுபவங்களையும்,முக்கிய சிகிச்சை முறைகளையும் பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்களை எழுத வேண்டும் என்றார்.மேலும் சிவகங்கை மாவட்டத்தின் மறைந்த தியாகிகள் பற்றியும் தியாகிகள் பூங்காவின் வரலாறு பற்றியும் எடுத்துரைத்தார்.மேலும் மருத்துவ துறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கும் 33 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.


இதில் சிறப்பு விருந்தினர்களாக புரிந்த பேராசிரியர் மருத்துவர் ஜெயலால் முன்னாள் தேசிய தலைவர், இந்திய மருத்துவ கழகம் டெல்லி., பேராசிரியர் மருத்துவர்.கனக சபாபதி முன்னாள் மாநில தலைவர் இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை, மற்றும் பேராசிரியர் மருத்துவர் சிங்காரவேல் மூத்த துணை தலைவர் இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை,மருத்துவர் ஸ்ரீதர் முன்னாள் மாநில செயலாளர் இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


மேலும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே .எம் .சி கிளை சார்பாக 50,000 மரக்கன்றுகளை சுற்றுவட்டார பகுதிகளில் ,சிவகங்கை மாவட்டம் முழுவதும் நட முடிவு செய்யப்பட்டதின் முதற்கட்டமாக முதல் மரக்கன்றை மருத்துவர் சந்திரமோகன் தலைவர் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே .எம் .சி கிளை அவர்கள் செந்தில் குமார் ஐபிஎஸ் அவர்களிடம் வழங்கினார்.

இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே .எம் .சி கிளை செயலாளர் மருத்துவர் குமரேசன் அவர்கள் நன்றியுரை கூறினார்.


விழாவில் மருத்துவர்களின் குழந்தைக்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


செய்தி &படங்கள்
சிங்தேவ்