காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் மாபெரும் செஸ் திருவிழா:நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்..

காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில் செட்டிநாடு பப்ளிக் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாபெரும் செஸ் திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
44-வத உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்ற சென்னையில் தொடங்கியது. அதன் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக காரைக்குடியில் நேற்று 10 நாட்கள் தொடர் செஸ் விழிப்புணர்வு போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டன.


10 நாள் விழிப்புணர்வு செஸ் திருவிழாவை காரைக்குடி நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.செட்டிநாடு பள்ளி தாளாளர் எஸ் பி குமரேசன் ,காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழா போட்டிகளைத் தொடங்கி வைத்து நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை அவர் பேசும் போது சென்னை மகாபலிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கி வைக்கும் இத்தருணத்தில். காரைக்குடியில் 10 நாட்கள் செஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாமை தொடங்கியுள்ளோம் என்றார். இந்த பயிற்சி விழாவை செட்டிநாடு பப்ளிக் பள்ளி தொடக்க ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்துள்ளது. பள்ளியின் தாளாளர் எஸ்.பி. குமரேசனுக்கு மனமார்ந்த நன்றிகள். செஸ் விழிப்புணர்வு போட்டிகள் மாவட்ட அளவில் பிரபலமாகி வரும் நிலையில் இந்த போட்டிகள் நடைபெறுவது செஸ் வீரர்களுக்கு அதிக ஊக்கத்தை அளிக்கும். நகராட்சி சார்பாக அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.


தலைமை ஏற்று பேசிய செட்டிநாடு பப்ளி்க் பள்ளியின் தாளாளர் எஸ்.பி.குமரேசன் உலக அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. நாங்கள் எங்கள் பள்ளியில் செஸ் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த விழாக் காலத்தில் எங்கள் பள்ளியின் பங்களிப்பு இருக்கும் வகையில் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செட்டி நாடு பப்ளிக் பள்ளி சார்பில் நகர் மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம். அவரின் ஒத்துழைப்போடு 24 மணி நேரத்தில் மிக விரைவாக மகாபலிபுரத்தில் போட்டி தொடங்கும் போது காரைக்குடியிலும் தொடங்க விரும்பினோம். அதுபோல் தொடங்கியது.

இந்தப் போட்டியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் , படித்தவர்கள், படிக்காதவர்கள், விளையாட்டைத் தெரிந்தவர்களும்,கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பத்து நாட்களிலும் 100 மணி நேரம் பயிற்சி நடைபெறும் என்றார்.
காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துதுரை போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் உலக அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் பதக்கம் வென்ற செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி லக்ஷனாஸ்ரீ, ரேட்டிங் பிளேயர் இந்திரா ஆகியோர் விளையாடினர். தாசில்தார் மாணிக்கவாசகம், செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர் குமரேசன், டாக்டர் முதல்வர் உஷாகுமாரி, நகராட்சி கவுன்சிலர்கள் தெய்வானை, கண்ணன், கலா காசிநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கண்ணன், கூடுதல் செயலாளர் பிரகாஷ் மணிமாறன் மற்றும் செஸ் நிர்வாகிகள் நடுவராக செயல்பட்டனர்.


போட்டிகள் ஆகஸ்ட் 10&ம் தேதி வரை நடக்கிறது. மெகா செஸ்போர்டுடன் கூடுதலாக 6 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களும் மற்றும் செஸ் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்